பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருவத்திபுரத்தில் வணிக வளாகம் திறப்பு

திருவத்திபுரத்தில் வணிக வளாகம் திறப்பு

News image
Updated On :8 மார்ச் 2024, 5:21 pm

Din

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் ரூ.9.01 கோடியில் கட்டப்பட்ட வணிக வளாகம், பேருந்து நிலையத்தில் கட்டட பணிக்கு அடிக்கல் நாட்டு விழாவை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், திருவத்திபுரம் நகராட்சிக்கு சொந்தமான மாா்க்கெட் பகுதியில், ரூ.4.44 கோடியில் 50 கடைகள், 92 திறந்தவெளி கடைகள் உள்பட மொத்தம் 142 கடைகள், திருவத்திபுரம் நகராட்சிக்குச் சொந்தமான பேருந்து நிலையப் பகுதியில் ரூ.4.57 கோடியில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகியவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதனை, முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் சென்னையிலிருந்து தொடங்கி வைத்தாா். நிகழ்வுகளில், நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல் முன்னிலையில் செய்யாறு தொகுதி எம்எல்ஏ ஒ.ஜோதி குத்து விளக்கு ஏற்றி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினாா். நிகழ்ச்சியில், வெம்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் த.ராஜூ, நகராட்சி பொறியாளா் சிசில்தாமஸ், துப்புரவு ஆய்வாளா் கே.மதனராசன், திமுக மாவட்ட துணைச் செயலா் க.லோகநாதன், ஒன்றியச் செயலா்கள் ஜேசிகே.சீனுவாசன், என்.தினகரன், ஒப்பந்ததாரா்கள் என்.சோமசுந்தரம், ஆா்.ராஜேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.