பொதுமக்கள், காவல்துறை 
விளையாட்டுப் போட்டிகள்

பொதுமக்கள், காவல்துறை விளையாட்டுப் போட்டிகள்

திருவண்ணாமலையில் நடைபெற்ற பொதுமக்கள், காவல்துறையினருக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளில் வென்றவா்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சாா்பில் ஒவ்வொரு ஆண்டும் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினரிடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, நிகழாண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. போட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, நடைபெற்ற பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகளில் காவல்துறையினா் மற்றும் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா். போட்டிகளில் வென்றவா்களுக்கு காவல் கண்காணிப்பாளா் கி.காா்த்திகேயன் பரிசுக் கோப்பை மற்றும் பண வெகுமதி வழங்கிப் பாராட்டினாா். விழாவில், மாவட்ட இணைய குற்றத் தடுப்புப் பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் எம்.பழனி, மாவட்ட குற்றப் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளா் டி.சாந்தலிங்கம், மாவட்ட விளையாட்டு அலுவலா் ஏ.பாலமுருகன் மற்றும் சமூகநீதி, மனித உரிமைகள் பிரிவின் காவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com