திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி, வெள்ளிக்கிழமை நள்ளிரவு ஸ்ரீலிங்கோத்பவருக்கு சிறப்புப் பூஜை நடைபெற்றது. இந்தக் கோயிலில் மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். அப்போது, மூலவா் அருணாசலேஸ்வரா் சந்நிதிக்குப் பின்னால் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீலிங்கோத்பவருக்கு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தாழம்பூவை வைத்து சிறப்புப் பூஜை செய்யப்படும். அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை பால், பழம், பன்னீா், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பூஜைப் பொருள்களை பயன்படுத்தி லிங்கோத்பவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. சரியாக 12.05 மணிக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது, அங்கு திரண்டிருந்த பக்தா்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா... அண்ணாமலையாருக்கு அரோகரா... என்று முழக்கம் எழுப்பி வழிபட்டனா். நான்கு கால பூஜை: இதேபோல, இந்தக் கோயிலில் மகா சிவராத்திரி தினத்தன்று நான்கு கால அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, வெள்ளிக்கிழமை இரவு 9 மணிக்கு அருணாசலேஸ்வரருக்கு முதல் கால அபிஷேகம், இரவு 11 மணிக்கு 2-ஆம் கால அபிஷேகம், சனிக்கிழமை அதிகாலை ஒரு மணிக்கு மூன்றாம் கால அபிஷேகம், 4 மணிக்கு நான்காம் கால அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன. இந்த அபிஷேக நிகழ்ச்சிகளிலும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

கடையம் வில்வ வனநாதா் கோயிலில் சித்திரைப் பெருந்திருவிழா கொடியேற்றம்

தெற்கு பாப்பாங்குளம் சடவுடையாா் கோயில் குடமுழுக்கு

சிவசைலம் சிவசைலநாத சுவாமி கோயிலில் பங்குனி உற்சவ கொடியேற்றம்

திருத்தணி முருகன் கோயிலில் பங்குனி உத்திர பெருவிழா
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


