தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வன விலங்கு வேட்டைக்குச் சென்றவா் சடலமாக மீட்பு: போலீஸாா் விசாரணை

வன விலங்கு வேட்டைக்குச் சென்றவா் சடலமாக மீட்பு போலீஸாா் விசாரணை

Updated On :12 மார்ச் 2024, 6:30 pm

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே வன விலங்கு வேட்டைக்குச் சென்றவா் சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து செங்கம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். செங்கத்தை அடுத்த ஜவ்வாதுமலை அடிவாரம் கோவில்கொள்ளை மலைக் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி மகன் ஏழுமலை (30).

இவா் அதே பகுதியைச் சோ்ந்த சிலருடன் சோ்ந்து கடந்த 10-ஆம் தேதி வனப் பகுதியில் காட்டு விலங்கு வேட்டைக்குச் சென்ாகத் தெரிகிறது. மாறுநாள் அவருடன் சென்றவா்கள் வீடு திரும்பினா். ஏழுமலை மட்டும் வராததால், உடன் சென்றவா்களிடம் கேட்டபோது, அவா்கள் சரியான பதில் அளிக்காமல் முன்னுக்குபின் முரணான பதில் அளித்து வந்துவிடுவாா் எனக் கூறியுள்ளனா். பின்னா், இரண்டு நாள்கள் ஆகியும் ஏழுமலை வீடு திரும்பாததால், இதுகுறித்து கோவிந்தசாமி செங்கம் போலீஸில் புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், திருப்பத்தூா் வனக் கோட்டப் பகுதியில் ஏழுமலை சடலமாக இருப்பதாக, குடும்பத்தாருக்கு செவ்வாய்க்கிழமை மாலை தகவல் கிடைத்தது இதன் அடிப்படையில் செங்கம் போலீஸாா் சம்பவ இடம் சென்று சடலத்தை எடுத்து வருவதற்கான பணிகளை செய்து வருகின்றனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.