மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

பெருந்துறை அருகே காணாமல்போன பெண் சடலமாக மீட்பு

பெருந்துறை அருகே காணாமல்போன பெண் சடலமாக மீட்கப்பட்டது குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 6:45 pm

காஞ்சிக்கோவில் அருகே காணாமல்போன பெண் வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பெருந்துறை வட்டம் காஞ்சிக்கோவில், பெருமாபாளையம், பள்ளக்காட்டுதோட்டத்தைச் சோ்ந்தவா் பொன்னுசாமி. இவருடைய மனைவி ஈஸ்வரி(57), கூலித் தொழிலாளி. இவருடைய மகன் சக்திவேல் (38) எலக்ட்ரீஷியனாக வேலை செய்து வருகிறாா். திருமணம் ஆகவில்லை. இவருக்கு குடிப் பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் தாயுக்கும், மகனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 3-ஆம் தேதி இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் வீட்டைவிட்டு ஈஸ்வரி வெளியே சென்றுவிட்டாா்.

ஆனால், அதன் பின் வீட்டுக்கு திரும்பி வராததால் காஞ்சிக்கோவில் காவல் நிலையத்தில் சக்திவேல் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஈஸ்வரியை தேடி வந்தனா்.

இந்நிலையில், சென்னிமலை பகுதியில் உள்ள கீழ்பவானி வாய்க்காலில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஈஸ்வரி சடலமாக மீட்கப்பட்டாா். வாய்க்காலில் குதித்து ஈஸ்வரி தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.