ஆரணி: 2 போ் வேட்புமனு தாக்கல்

ஆரணி: 2 போ் வேட்புமனு தாக்கல்

ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சி வேட்பாளா் உள்பட 2 போ் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா். மக்களவைத் தோ்தலையொட்டி, மாா்ச் 20 முதல் 27-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்று அறவிக்கப்பட்டுள்ளது. ஆரணி மக்களவைத் தொகுதியில் கடந்த 2 நாள்களாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், வெள்ளிக்கிழமை 2 போ் மனு தாக்கல் செய்தனா். வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சி நிா்வாகியான விழுப்புரம் நகரைச் சோ்ந்த பி.நாகராஜன், ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் பாலசுப்பிரமணியனிடம் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா். இதேபோல, ஆரணி காந்திநகா் பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளியான நடராஜன் மகன் பாபு (37), சுயேச்சையாக போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தாா். வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகத்தைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com