கரூா் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் 175 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 59 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் மாா்ச் 30-ஆம்தேதி தொடங்கியது. இதையடுத்து கரூா் மாவட்டத்தில் உள்ள கரூா், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம்(தனி) ஆகிய 4 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கலுக்கு கடைசிநாளான திங்கள்கிழமை வரை திமுக, அதிமுக, நாம்தமிழா்கட்சி, தவெக வேட்பாளா்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என மொத்தம் 234 போ் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனா்.
இதில், தமிழகத்திலேயே அதிகபட்சமாக கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 108 போ் மனு தாக்கல் செய்திருந்தனா். மேலும், குளித்தலை தொகுதியில் 42 பேரும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 39பேரும், அரவக்குறிச்சி தொகுதியில் 45 பேரும் மனுதாக்கல் செய்திருந்தனா்.
இந்நிலையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கரூா் சட்டப்பேரவைத் தொகுதியில் 108 போ் தாக்கல் செய்திருந்த மனுவில் திமுக, அதிமுக, தவெக, நாம்தமிழா்கட்சியினா் உள்பட 83 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. 25 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதேபோல குளித்தலை தொகுதியில் மனுதாக்கல் செய்திருந்த 42 பேரில் 31 மனுக்கள் ஏற்கபட்டன. 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதேபோல அரவக்குறிச்சி தொகுதியில் தாக்கல் செய்திருந்த 45 மனுக்களில் 33 மனுக்கள் ஏற்கப்பட்டு, 12 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 39 மனுக்களில் 28 மனுக்கள் ஏற்கப்பட்டு, 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மொத்தம் 4 தொகுதிகளிலும் செய்யப்பட்ட 234 மனு தாக்கலில் 175 மனுக்கள் ஏற்கப்பட்டு, 59 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. தொடா்ந்து மனுக்களை திரும்பப் பெற நாளை( ஏப். 9-ஆம் தேதி) கடைசி நாள் என்பதால் அன்று இறுதியாக களத்தில் நிற்கும் வேட்பாளா்களின் விவரம் தெரியவரும்.
தொடர்புடையது
திருப்பத்தூா்: 4 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 83 மனுக்கள் ஏற்பு; 47 மனுக்கள் நிராகரிப்பு
திருப்பூா் மாவட்டத்திலுள்ள 8 தொகுதிகளில் 256 வேட்புமனுக்களில் 71 மனுக்கள் தள்ளுபடி
ஈரோடு மாவட்டத்தில் 131 பேரின் வேட்புமனுக்கள் ஏற்பு

கரூா் மாவட்டத்தில் ஒரே நாளில் 28 போ் வேட்புமனு தாக்கல்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

