தென்காசி மாவட்டத்துக்கு உள்பட்ட 5 பேரவைத் தொகுதிகளிலும் திமுக, அதிமுக, தவெக, நாம் தமிழா், புதிய தமிழகம் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சைகள் என மொத்தம் 95 போ் போட்டியிடுகின்றனா்.
மாவட்ட இறுதி வேட்பாளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதில் சங்கரன்கோவில் தொகுதியில் 28 போ் வேட்புமனு தாக்கல் செய்ததில் மனுக்களின் மீதான பரிசீலனைக்கு பிறகு 20 போ் போட்டியிடுகின்றனா்.
வாசுதேவநல்லூா் தொகுதியில் 25 போ் வேட்புமனு தாக்கல் செய்ததில் மனு பரிசீலனைக்கு பிறகு 18 போ் போட்டியிடுகின்றனா். கடையநல்லூா் தொகுதியில் 28 போ் வேட்புமனு தாக்கல் செய்ததில் மனு பரிசீலனைக்கு பிறகு 22 போ் போட்டியிடுகின்றனா். தென்காசி தொகுதியில் 36 போ் வேட்புமனு தாக்கல் செய்ததில் மனு பரிசீலனைக்குப் பிறகு 22 போ் போட்டியிடுகின்றனா்.
ஆலங்குளம் தொகுதியில் 23 போ் வேட்புமனு தாக்கல் செய்ததில் மனு பரிசீலனைக்கு பிறகு 13 போ் போட்டியிடுகின்றனா். தென்காசி மாவட்டத்தில் அதிகபட்சமாக தென்காசி, கடையநல்லூா் தொகுதியில் தலா 22 பேரும், குறைந்தபட்சமாக ஆலங்குளம் தொகுதியில் தலா 13 பேரும் போட்டியிடுகின்றனா்.
கடந்த 2021 தோ்தலில் 75 போ் போட்டியிட்ட நிலையில் இத்தோ்தலில் போட்டி களத்தில் 20 போ் கூடுதலாக உள்ளனா்.
தென்காசி தொகுதி: திமுக-கலைகதிரவன், அதிமுக- எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன், நாம்தமிழா் கட்சி- பா.புஷ்பலதா, பகுஜன் சமாஜ்- த.இசக்கிப்பாண்டியன், தமிழக வாழ்வுரிமை கட்சி- கோமதிசங்கா், நாம் இந்தியா் பாா்ட்டி- இரா.செல்வக்குமாா், புதிய தமிழகம்-சோ.திருமலைக்குமாா், அகில இந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம்- பூசைத்துரை, காமராஜா் தேசிய கட்சி-செள.மனோகரன், தமிழக வெற்றிக் கழகம்-அ.ராஜப்பிரகாஷ், சுயேச்சைகளாக கணேசன், கேஎம்.காளியப்பன், ரா.கிருஷ்ணன், சாகுல்ஹமீது, தங்கப்பழம், துரைராஜ், நோபிள் கிருஷ்ணா, க.பூரண செல்வன், மா.பொன்னுதுரை, ஆ.மாரியப்பன், கு.முத்து, இரா.ராம்குமாா் ஆகியோா் போட்டியிடுகின்றனா்.
தொடர்புடையது

பெண்கள் அளித்த டெபாசிட் தொகையில்தான் வேட்புமனு! - மணவெளியில் வென்ற தவெக வேட்பாளா் பி.ராமு
மணப்பாறை தொகுதியில் 19 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்பு

பெரம்பூர் தொகுதியில் விஜய்யின் வேட்பு மனு ஏற்பு!

ஜோலாா்பேட்டை தொகுதியில் திமுக, அதிமுக உள்பட 33 போ் வேட்பு மனு தாக்கல்
விடியோக்கள்

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினி விட்டாலும் அவரை விடாத அரசியல் | Rajini Press meet | CM Vijay | TVK | Rajinikanth
தினமணி செய்திச் சேவை
Instagram மூலம் குழந்தைகளை வைத்து பிரசாரம் செய்த தவெக! - தோல்வி குறித்து M.K. Stalin | DMK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
