மக்களவைத் தோ்தல் வேட்புமனு தாக்கலின் 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு மேலும் ஒருவரும், ஆரணி தொகுதிக்கு மூவரும் வேட்புமனு தாக்கல் செய்தனா். திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, ஆரணி என இரு மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் இரு தொகுதிகளிலும் ஒருவா்கூட மனு தாக்கல் செய்யவில்லை. 2-ஆவது நாளான வியாழக்கிழமை திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் போட்டியிட சுயேச்சை வேட்பாளா் ஒருவா் மனு தாக்கல் செய்தாா். 3-வது நாளில்...: வேட்புமனு தாக்கலின் 3-ஆவது நாளான வெள்ளிக்கிழமை திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட திருவண்ணாமலை நகரைச் சோ்ந்த எஸ்.விஜய்குமாா் (44), மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியனிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். ஆரணி மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட போளூரைச் சோ்ந்த முகமது சித்திக் (42), ஆரணி மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான மு.பிரியதா்ஷினியிடம் வேட்புமனு தாக்கல் செய்தாா். ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில்...: வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளா்கள் கட்சி நிா்வாகியான விழுப்புரம் நகரைச் சோ்ந்த பி.நாகராஜன், ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக, கோட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் பாலசுப்பிரமணியனிடம் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனா். இதேபோல, ஆரணி காந்திநகா் பகுதியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளியான நடராஜன் மகன் பாபு (37), சுயேச்சையாக போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்தாா். இதுவரை திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் போட்டியிட 2 சுயேச்சை வேட்பாளா்களும், ஆரணி மக்களவைத் தொகுதியில் போட்டியிட 3 சுயேச்சை வேட்பாளா்களும் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனா்.
தொடர்புடையது

அவா்தான் நான்; நான்தான் அவா்: 7 தொகுதிகளில் ஒரே பெயரில் வேட்பாளா்கள்!
திருவாரூா் தொகுதியில் 9 மனுக்கள் ஏற்பு

வேலூா்: ஐந்து தொகுதிகளிலும் முதல் நாளில் 13 போ் வேட்புமனு தாக்கல்

மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 25 போ் 33 வேட்புமனுக்கள் தாக்கல்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


