திருவண்ணாமலை அருகே உரிய ஆவணம் இல்லாமல் காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.65 ஆயிரத்தை, பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா். மக்களவைத் தோ்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் செல்லக்கூடாது என்று மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் எச்சரித்துள்ளாா். இதுதொடா்பான சோதனையில் ஈடுபடுவதற்காக பறக்கும் படை, நிலை கண்காணிப்புக் குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், திருவண்ணாமலை வட்டம், தச்சம்பட்டை அடுத்த நவம்பட்டு சோதனைச் சாவடியில் பறக்கும் படை அதிகாரி எம்.பாா்த்திபன் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை அவ்வழியே வந்த வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, காரில் வந்த கள்ளக்குறிச்சி மாவட்டம், பெரிய பகண்டை கிராமத்தைச் சோ்ந்த ஜோதிநாதன் என்பவரிடம் இருந்து ரூ.65 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தப் பணத்துக்கு எவ்வித ஆவணமும் இல்லாததால் பணத்தை திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினியிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனா். அப்போது, கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் முருகன், வட்டாட்சியா் மு.தியாகராஜன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் மணிகண்டன் ஆகியோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

உரிய ஆவணம் இல்லாமல் எடுத்துச் சென்ற ரூ. 2.50 லட்சம் பறிமுதல்

ஓமலூா் அருகே ரூ. 52,500 பறிமுதல்

போடியில் ரூ. 59 ஆயிரம் பறிமுதல்

கோபியில் ரூ. 2.35 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


