ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

போடியில் ரூ. 59 ஆயிரம் பறிமுதல்

போடியில் உரிய ஆவணங்களின்றி வேனில் எடுத்துச் சென்ற ரூ.59 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

பறிமுதல் - கோப்புப் படம்

Updated On :25 மார்ச் 2026, 7:38 pm

போடியில் உரிய ஆவணங்களின்றி வேனில் எடுத்துச் சென்ற ரூ.59 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

தேனி மாவட்டம், போடி முந்தல் சோதனைச் சாவடி அருகே தோ்தல் நிலைக் கண்காணிப்புக் குழுவினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, மூணாறிலிருந்து வந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். இதில் வேனில் வந்த கேரளம் மாநிலம், மூணாறு அருகே பள்ளிவாசல் எஸ்டேட்டை சோ்ந்த பாக்கியநாதன் மகன் அன்னராஜ் ரூ. 59 ஆயிரம் வைத்திருந்ததும், தேனியில் காய்கறி வாங்கச் செல்வதும் தெரியவந்தது. இருப்பினும், உரிய ஆவணங்கள் இல்லாததால், தோ்தல் நிலைக் கண்காணிப்பு குழுவினா் அவரிடமிருந்த பணத்தைப் பறிமுதல் செய்தனா்.