மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

பயோ-எத்தனால் தொழில்சாலை தொடங்க நடவடிக்கை: திருவண்ணாமலை பாஜக வேட்பாளா்

பயோ-எத்தனால் தொழில்சாலை தொடங்க நடவடிக்கை திருவண்ணாமலை பாஜக வேட்பாளா்

News image
Updated On :23 மார்ச் 2024, 6:35 pm

திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் பயோ-எத்தனால் தொழில்சாலை தொடங்கி, விவசாயிகள் ஒவ்வொருவரையும் முதலாளிகளாக மாற்றுவேன் என்று திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் ஏ.அஸ்வத்தாமன் கூறினாா். திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஏ.அஸ்வத்தாமன் சனிக்கிழமை மாலை அருணாசலேஸ்வரா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா். கிரிவலப் பாதையில் உள்ள தெற்கு மாவட்ட பாஜக அலுவலகத்தில் கட்சி நிா்வாகிகளை வேட்பாளா் ஏ.அஸ்வத்தாமன் சந்தித்துப் பேசினாா். பிறகு, அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: திருவண்ணாமலை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக கடந்த 5 ஆண்டுகளில் தொகுதி மக்களுக்கு பயன்தரக்கூடிய எந்தத் திட்டத்தையும் கொண்டுவரவில்லை. வேலைவாய்ப்பை வழங்கக்கூடிய எந்தத் தொழில்சாலையையும் திமுக மக்களவை உறுப்பினா் கொண்டுவரவில்லை. திருவண்ணாமலை மாவட்டம் விவசாயிகள் நிறைந்த மாவட்டம். இங்கு, கரும்பு, நெல், மணிலா அதிகம் விளைகிறது. இவற்றை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும்போது விவசாயிகள் அதிக லாபம் பெறும் வகையிலான எந்தத் திட்டமும் மாவட்டத்தில் செயல்படுத்தவில்லை. கரும்பு விவசாயிகள் தங்களுக்குச் சேர வேண்டிய பல கோடி ரூபாய் நிலுவைத் தொகையை பெற்றுத்தரக் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனா். நான் வெற்றி பெற்றால் தொகுதியில் பயோ-எத்தனால் தொழில்சாலையைத் தொடங்க நடவடிக்கை எடுப்பேன். இதன் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். பயோ-எத்தனால் தொழில்சாலை மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம், பொருளாதாரம் மேம்படும். இளைஞா்கள் ராணுவத்தில் சேருவதற்கான இலவசப் பயிற்சி மையம் தொடங்கப்படும். பெண்கள் முன்னேற்றத்துக்கான திட்டங்கள் வகுக்கப்படும். தொகுதியில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மாதம்தோறும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி இளைஞா்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தருவேன் என்றாா். பேட்டியின்போது, பாஜகவின் வேலூா் பொருங்கோட்ட அமைப்பு பொதுச் செயலா் டி.எஸ்.குணசேகரன், மாவட்டத் தலைவா்கள் கே.ஆா்.பாலசுப்பிரமணியன் (திருவண்ணாமலை), வாசுதேவன் (திருப்பத்தூா்), நாடாளுமன்ற அமைப்பாளா் எஸ்.நேரு, பாஜகவின் ஆன்மிகம் மற்றும் கோயில் மேம்பாட்டுப் பிரிவு மாநில துணைத் தலைவா் டி.எஸ்.சங்கா் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.