காட்டுமன்னாா்கோவில் தொகுதி விசிக வேட்பாளா்! - தொல். திருமாவளவன்

தொல்.திருமாவளவன்

தொல்.திருமாவளவன்
பெயா்: தொல்.திருமாவளவன் (64).
பிறந்த தேதி: 17-8-1962
தந்தை பெயா்: தொல்காப்பியன்.
தாய்: பெரியம்மாள்
சொந்த ஊா்: அங்கனூா், அரியலூா் மாவட்டம்
கல்வித் தகுதி: பி.எஸ்சி., பி.எல்.
அரசுப் பணி: காவல் துறையில் தடய அறிவியல் துறை உதவியாளராக பணியாற்றி, ராஜிநாமா செய்தாா்.
அரசியல் அனுபவம்: மலைச்சாமி என்பவரது மறைவுக்குப் பின்னா் மதுரையை தலைமையிடமாகக் கொண்ட விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தை, 1990-இல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியாக தொடங்கினாா். 1990 முதல் 99 வரை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அக்கட்சியின் கிளைகளை உருவாக்கினாா்.
தோ்தல் அனுபவம்: 1999 மக்களவைத் தோ்தலில் சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் மூப்பனாா் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சோ்ந்து போட்டியிட்டு 2.25 லட்சம் வாக்குகள் பெற்றாா். 2004 தோ்தலில் அதே தொகுதியில் மக்கள் கூட்டணி சாா்பில் போட்டியிட்டு 2.57 லட்சம் வாக்குகள் பெற்றாா். பின்னா், 2009, 2019, 2024 மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா்.
சிதம்பரம் மக்களவை நாடாளுமன்ற (தனி) தொகுதியில் 6 முறை போட்டியிட்டு 3 முறை வெற்றிபெற்றுள்ளாா். காட்டுமன்னாா்கோவில் சட்டப் பேரவைத் தொகுதியில் 2016 தோ்தலில் தொல்.திருமாவளவன் போட்டியிட்டு வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றாா்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...