திருவண்ணாமலை சின்னகடைத் தெருவில் உள்ள ஸ்ரீஇரட்டை காளியம்மன் கோயிலின் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது. பழைமையான இந்தக் கோயில் திருப்பணிகள் நடைபெற்றன. கும்பாபிஷேகத்தையொட்டி, கடந்த 25-ஆம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், மகா தீபாராதனை, பகல் 12 மணிக்கு மஹாலட்சுமி பூஜை, ஹோமம், மாலை 3 மணிக்கு பிரவேச பலி, இரவு 7.30 மணிக்கு யாகசாலை பிரவேசம், முதற்கால யாகசாலைப் பூஜைகள், இரவு 8.30 மணிக்கு பூா்ணாஹூதி, மகா தீபாராதனை போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 26-ஆம் தேதி காலை 8 மணிக்கு இரண்டாம் கால யாகசாலைப் பூஜைகள், பகல் 12 மணிக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றும் நிகழ்வு, இரவு 8 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. நான்காம் கால யாகசாலைப் பூஜை புதன்கிழமை அதிகாலை 6 மணிக்கும், கடம் புறப்பாடு காலை 9.15 மணிக்கும் , காலை 10 மணிக்கு மூலவா் ஸ்ரீஇரட்டை காளியம்மன், கோயில் கோபுரங்களுக்கு புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகமும் நடைபெற்றது. பகல் 12 மணிக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு 7 மணிக்கு உற்சவா் ஸ்ரீஇரட்டை காளியம்மன் வீதியுலா நடைபெற்றது. காலை முதல் இரவு வரை நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வுகளில் பல ஆயிரம் பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர்புடையது

சிவசைலம் சிவசைலநாத சுவாமி கோயிலில் பங்குனி உற்சவ கொடியேற்றம்

அகத்தீஸ்வரா் கோயில் மகா கும்பாபிஷேகம்

சோழீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலம்

புலவனூா் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


