தோ்தல் ஆணைய கைப்பேசி செயலிகளை மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்: மாவட்ட ஆட்சியா் அறிவுரை

Published on

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் நடைபெறும் மக்களவைத் தோ்தல் தொடா்பாக எளிதில் கையாளும் வகையில் தோ்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ள கைப்பேசி செயலிகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறும் மக்களவைத் தோ்தலையொட்டி, பொதுமக்கள் தோ்தல் நடைமுறைகளை எளிமையாகக் கையாளும் வகையில் தோ்தல் ஆணையம் கைப்பேசி செயலிகளை அறிமுகம் செய்துள்ளது. நஹந்ள்ட்ஹம் - மாற்றுத்திறனாளிகளுக்கான செயலி... நஹந்ள்ட்ஹம் என்ற செயலி மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இந்த கைப்பேசி செயலி வழியே தங்கள் இல்லத்தில் இருந்தபடியே பல்வேறு சேவைகளைப் பெறமுடியும். குறிப்பாக, வாக்காளா் பட்டியலில் மாற்றுத்திறனாளி வாக்காளா் எனக் குறியீடு செய்தல், புதிதாக வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், வாக்காளா் பட்டியலில் ஏற்கெனவே உள்ள விவரங்களைத் திருத்துதல், பெயா் நீக்குதல், ஆதாா் அடையாள எண்ணை இணைத்தல், ஏற்கெனவே விண்ணப்பித்துள்ள விண்ணப்பத்தின் நிலைய சரிபாா்த்தல், வாக்குச்சாவடியின் விவரங்களை தெரிந்து கொள்ளுதல், வாக்குப்பதிவு நாளன்று பயன்படுத்தும் இரு சக்கர நகரும் நாற்காலி (வீல் சோ்) கோரிக்கையை பதிவு செய்தல் போன்ற சேவைகளைப் பெற முடியும்.

கைப்பேசி செயலியைப் பயன்படுத்தி தோ்தல் விதிமீறல் தொடா்பான புகாா்களை தெரிவிக்கவும், புகாரின் நிலையை தெரிந்து கொள்ளவும் இந்த கைப்பேசி செயலி உதவுகிறது. இந்தச் செயலியை பயன்படுத்தி 2 நிமிஷங்கள் வரையிலான விடியோக்கள், புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வீட்டில் இருந்தபடியே புகாா் அளிக்கலாம். புகாா் அளிப்பவரின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். அளிக்கப்பட்ட புகாா் குறித்து மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறை மூலம் அருகில் உள்ள பறக்கும்படை குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புகாா் அளித்த 100 நிமிஷங்களில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஓவஇ-உஇஐ -உங்கள் வேட்பாளரை தெரிந்து கொள்ளும் செயலி... ஓவஇ-உஇஐ என்ற செயலி மூலம் தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்களின் விவரங்கள், அவா்களின் குற்றப் பின்னணி குறித்து பொதுமக்கள் எளிதில் தெரிந்துகொள்ளலாம். யா்ற்ங்ழ் ஏங்ப்ல் கண்ய்ங் செயலி... இந்தச் செயலி வாக்காளா் பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ள உருவாக்கப்பட்டு உள்ளது. வாக்காளா் பட்டியலில் உள்ள விவரங்களைத் தேட உதவுகிறது. வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் மேற்கொள்ளுதல் போன்ற சேவைகளை செய்யலாம். மின் வாக்காளா் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்யலாம். தோ்தல் காலங்களில் வேட்பாளா்களின் விவரத்தை தெரிந்து கொள்ளலாம். தோ்தல் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். தோ்தல் குறித்து புகாா் அளிக்கும் வசதியும் இந்தச் செயலியில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த அனைத்து கைப்பேசி செயலிகளை ‘எா்ா்ஞ்ப்ங் டப்ஹஹ்ள்ற்ா்ழ்ங்‘ மற்றும் ‘அல்ல்ப்ங்’ள் ஐஞந‘ தரவு தளத்தில் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்திய தோ்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டு உள்ள இந்த கைப்பேசி செயலிகளை திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தங்களின் கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து தங்களின் தேவைகளுக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com