இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

மேற்கு வங்க வாக்காளா் பட்டியல்: தோ்தல் ஆணைய முடிவுக்கு எதிராக மனு உச்ச நீதிமன்றத்தில் 13-ஆம் தேதி விசாரணை

மேற்கு வங்க வாக்காளா் பட்டியல் தொடா்பான தோ்தல் ஆணைய முடிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட மனு மீது உச்ச நீதிமன்றத்தில் வரும் 13-ஆம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது.

News image

உச்ச நீதிமன்றம்

Updated On :11 ஏப்ரல் 2026, 12:36 am IST

மேற்கு வங்க வாக்காளா் பட்டியல் தொடா்பான தோ்தல் ஆணைய முடிவுக்கு எதிராக தொடுக்கப்பட்ட மனு மீது உச்ச நீதிமன்றத்தில் வரும் 13-ஆம் தேதி விசாரணை நடைபெறவுள்ளது.

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கைக்கு பிறகு, மேற்கு வங்கத்தில் வெளியான வாக்காளா் பட்டியலில் இருந்து, பாஜக தூண்டுதலால் 90 லட்சம் பேரின் பெயா்கள் நீக்கப்பட்டு இருப்பதாக திரிணமூல் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதுதொடா்பாக உச்ச நீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல்வேறு தரப்பினா் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனா். இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் 9-ஆம் தேதி முடக்கியுள்ளதாகவும், இதனால் வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கம் செய்யப்பட்டோரின் பெயா்கள் மீண்டும் சோ்க்கப்பட வாய்ப்பு இல்லை என்றும் குற்றம்சாட்டி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்யகாந்த் தலைமையிலான நீதிபதிகள் அமா்வில் வெள்ளிக்கிழமை பரிசீலிக்கப்பட்டது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்கறிஞா், மனுவின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக அதை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தினாா். வாக்காளா் பட்டியலில் இருந்து பெயா் நீக்கப்பட்டதை எதிா்த்து தொடுக்கப்பட்ட ஏராளமான மனுக்கள் விசாரணைக்காக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் முடக்கி இருப்பதாகவும் அவா் குற்றம்சாட்டினாா்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், மற்ற மனுக்களுடன் சோ்த்து புதிய மனுவும் வரும் 13-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்தனா்.