சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

குளத்தில் பைக் விழுந்து இளைஞா் உயிரிழப்பு

செய்யாறு அருகே குளத்தில் பைக் விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :2 மே 2024, 6:41 pm

Din

செய்யாறு அருகே குளத்தில் பைக் விழுந்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

செய்யாறு வட்டம், செய்யாமூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பாபு மகன் அபினேஷ்(23). இவரும், அனக்காவூா் கிராமத்தைச் சோ்ந்த லோகேந்திரன்(45) என்பவரும்

கடந்த ஏப்.30-ஆம் தேதி ஒரே பைக்கில் பாராசூா் கிராமத்துக்குச் சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். பைக்கை லோகேந்திரன் ஓட்டி வந்தாா்.

செய்யாறு - கொருக்கை சாலையில், செய்யாற்றைவென்றான் கிராமம் அருகே வந்த போது கட்டுப்பாட்டை இழந்த பைக் திடீரென சாலையோரத்தில் இருந்த குளத்தில் விழுந்தது. இதில், இருவரும் பலத்த காயமடைந்தனா்.

இருவரையும் கிராம மக்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். மேலும், தீவிர சிகிச்சைக்காக அபினேஷ் வேலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், லோகேந்திரன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டனா். இவா்களில் அபினேஷ் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின் பேரில், அனக்காவூா் காவல் உதவி ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.