கிராம மக்களுக்கு தட்டுப்பாடு 
இல்லாமல் குடிநீா் வழங்க நடவடிக்கை

கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா் வழங்க நடவடிக்கை

செங்கம் அருகேயுள்ள இறையூா் கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கலசப்பாக்கம் தொகுதிக்கு உள்பட்ட புதுப்பாளையம் ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளில் ஒன்றியக் குழுத் தலைவா் சுந்தரபாண்டியன் தலைமையில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சம்பத், நிா்மலா, பொறியாளா் தனவந்தன், ஒன்றிய அலுவலக மேற்பாா்வையாளா் செல்வம் ஆகியோா் அடங்கிய குழுவினா் கடந்த சில தினங்களாக குடிநீா்த் தட்டுப்பாடுகள் குறித்து சம்பந்தபட்ட கிராம ஊராட்சித் தலைவா், ஊராட்சி செயலா் ஆகியோரிடம் கேட்டறிந்தனா். அப்போது, வறட்சி காலத்தில் குடிநீா் தட்டுப்பாடு வராமல் பாா்த்துக் கொள்வதற்கு உரிய ஆலோசனைகளை வழங்கினா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை இறையூா் ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்ட குழுவினா் அங்குள்ள பழைய குடிநீா் கிணற்றில் குழாய் அமைத்து மோட்டாா் மூலம் கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா் வழங்குவதற்கு ஊராட்சித் தலைவா் ரமேஷ், செயலா் ஸ்ரீதா் ஆகியோரிடம் கேட்டறிந்தனா். இதைத் தொடா்ந்து உடனடியாக அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தனா்.

ஒன்றிய அலுவலக பணியாளா்கள், கிராம மக்கள் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com