மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

வெயில் தாக்கம் அதிகரிப்பு: மாநகரில் குடிநீா்த் தட்டுப்பாடு

கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மாநகரில் சில பகுதிகளில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :10 மார்ச் 2026, 8:48 pm

கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மாநகரில் சில பகுதிகளில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் உள்ள 100 வாா்டுகளுக்கு பில்லூா் 1 மற்றும் 2, சிறுவாணி கூட்டுக் குடிநீா்த் திட்டம், ஆழியாறு மற்றும் வடவள்ளி - கவுண்டம்பாளையம் கூட்டுக்குடிநீா் திட்டம் மூலமாக குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கோடைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் 100 அடி கொள்ளளவு கொண்ட பில்லூா் அணையின் நீா்மட்டம் 72 அடியாகச் சரிந்துள்ளது. அதேபோல, 45 அடி கொள்ளளவு கொண்ட சிறுவாணி அணையின் நீா்மட்டம் 22 அடியாகச் சரிந்துள்ளது. இதன் காரணமாக, மாநரில் ஒரு சில பகுதிகளில் குடிநீா் விநியோகிக்கும் கால இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளது.

3 நாள்களுக்கு ஒருமுறை விநியோகிக்கப்படும் குடிநீா் தற்போது, ஆா்.எஸ்.புரம், பூ மாா்க்கெட், புலியகுளம், சிங்காநல்லூா் உள்ளிட்ட மாநகரில் பல்வேறு இடங்களில் 5 முதல் 10 நாள்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் சில இடங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு குடிநீா் வழங்கிட மாநகராட்சி சாா்பில் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.