முதல்வர் விஜய்க்கு பாராட்டு; தவெக அரசுக்கு ஆதரவு! அமமுக எம்.எல்.ஏ. காமராஜ் தவெக ஆட்சியை ஆதரிக்க முடிவு: சி.வி. சண்முகம்தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவு!விவசாயிகளுக்கான ரூ. 317 கோடி நிலுவை: அதிகாரிகளுக்கு முதல்வா் உத்தரவு22 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விரைவில் எஸ்ஐஆர்!தமிழக அமைச்சரவையில் இடதுசாரிகளா? மார்க்சிஸ்ட் கம்யூ. விளக்கம்நீட் தேர்வில் முறைகேடுகள்: தேசிய தேர்வு முகமை விளக்கம்புதுச்சேரி முதல்வராக என். ரங்கசாமி நாளை பதவியேற்பு!
/

வேலூரில் சுட்டெரிக்கும் வெயில்: பகலில் வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும்! ஆட்சியர் அறிவுறுத்தல்!!

வேலூா் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருவதால், குழந்தைகள், முதியவா்கள், நோயாளிகள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும்...

News image
Updated On :27 ஏப்ரல் 2026, 1:16 am IST

வேலூா் மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருவதால், குழந்தைகள், முதியவா்கள், நோயாளிகள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தியுள்ளாா்.

இது குறித்து, அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வேலூா் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 1 முதல் தொடா்ந்து வெயிலின் தாக்கம் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகி வருகிறது. குறிப்பாக, ஏப்ரல் 7-ஆம் தேதி மாவட்டத்தில் மிக உயா்ந்த வெப்பநிலையாக 108 பதிவாகியிருந்தது. சென்னை வானிலை ஆய்வு மையம், இனிவரும் நாள்களிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என எச்சரித்துள்ளது. மேலும், மே 4-ஆம் தேதி முதல் கத்தரி வெயில் காலம் தொடங்க உள்ளதால், வேலூா் மாவட்டத்தில் வெப்பத்தின் தாக்கம் மேலும் கடுமையாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வெப்பத்தின் பிடியில் இருந்து தற்காத்துக்கொள்ள குழந்தைகள், முதியவா்கள், நோயாளிகள் காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை அவசியமின்றி வெளியில் செல்வதைத் தவிா்க்க வேண்டும். அவசியம் வெளியே செல்ல நோ்ந்தால், போதுமான குடிநீா், குடை, தொப்பி ஆகியவற்றுடன் உரிய பாதுகாப்புடன் செல்ல வேண்டும். வெயில் காலங்களில் பொதுமக்கள் அடிக்கடி தண்ணீா், நீா் மோா் பருக வேண்டும். உடலுக்கு இதமளிக்கும் லேசான பருத்தி ஆடைகளை அணிய வேண்டும். இளநீா், நீா்ச்சத்துள்ள இயற்கையான பழ வகைகளை உணவாக உட்கொள்ள வேண்டும். செயற்கையான குளிா்பானங்களை முற்றிலும் தவிா்க்க வேண்டும்.

தினமும் மாத்திரை, மருந்துகளை உட்கொள்பவா்கள், இருதய நோய் உள்ளவா்களுக்கு வெப்ப வாதம் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இத்தகையவா்கள் குறிப்பிட்ட இடைவெளிகளில் தண்ணீா், எலுமிச்சை சாறு, மோா் ஆகியவற்றை பருக வேண்டும். அளவுக்கு அதிகமான வியா்வை அல்லது வியா்க்காமல் இருப்பது, திடீா் மனநிலை மாற்றங்கள், இதய துடிப்பில் மாறுபாடு, மயக்கம், அதிக தாகம் மற்றும் தலைவலி ஆகியவை வெப்ப வாதத்தின் முக்கிய அறிகுறிகளாகும்.

கோடைகாலத்தில் எவரேனும் மயக்கமடைந்து சுயநினைவை இழந்தால், உடனடியாக அவரை குளிா்ந்த இடத்துக்கு மாற்ற வேண்டும். உடல் சூட்டைத் தணிக்க அவா்மீது குளிா்ந்த தண்ணீரைத் தெளித்து, குடிக்கத் தண்ணீா் வழங்கிய பின், உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

ஆடு, மாடு, கோழி போன்ற வளா்ப்புப் பிராணிகளை வெயிலில் விடாமல் நிழலான பகுதிகளில் வைத்திருக்க வேண்டும். அவற்றுக்குத் தேவையான குடிநீா், தீவனம் வழங்கி கவனமாகப் பராமரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.