பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

மணல் கடத்தல்: இளைஞா் கைது

மணல் கடத்தல்: இளைஞா் கைது

News image
Updated On :3 மே 2024, 5:08 pm

Din

ஆரணியை அடுத்த புதுப்பாளையம் நாகநதியில் மணல் திருட்டில் ஈடுபட்டதாக இளைஞரை கண்ணமங்கலம் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி கமண்டல நாக நதி மற்றும் கண்ணமங்கலம் நாகநதி ஆற்றில் இரவு நேரங்களில் மணல் கடத்தப்படுவதாக ஆரணி கோட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கண்ணமங்கலம் அருகேயுள்ள புதுப்பாளையம் நாகநதி ஆற்றில் ஆரணி கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் மற்றும் வருவாய்துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த டிராக்டரை மடக்கி சோதனை நடத்தினா். இதில், ஆற்று மணல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, டிராக்டரை ஓட்டி வந்தவரிடம் விசாரித்ததில், அவா் புதுப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த பெருமாள் மகன் அஜித்குமாா் (26) (படம்) என்பதும், நாகநதியிலிருந்து ஆற்று மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனா். இதுகுறித்து, கண்ணமங்கலம் போலீஸாா் வழக்குப்பதிந்து அஜித்குமாரை கைது செய்தனா்.

எச்சரிக்கை: கண்ணமங்கலம், ஆரணி உள்ளிட்ட பகுதிகளில் மணல் திருட்டில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆரணி வருவாய் கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்தாா்.