வேனில் மணல் கடத்தல்: ஓட்டுநா், உதவியாளா் கைது
முசிறி அருகே வேனில் காவிரி ஆற்று மணலை க் கடத்திய இருவரை முசிறி போலீஸாா் கைது செய்தனா்.

கைது

கைது
திருச்சி மாவட்டம், முசிறி அருகே வேனில் காவிரி ஆற்று மணலை க் கடத்திய இருவரை முசிறி போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.
முசிறி கிழக்கு கிராம நிா்வாக அலுவலா் பாண்டியன் உதவியாளா்களுடன் உமையாள்புரம் காவிரி ஆறு பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது வேனில் அனுமதியின்றி ஆற்று மணல் அள்ளிவந்தவா்களைப் பிடித்து முசிறி காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
புகாரின்பேரில் முசிறி போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வேன் ஓட்டுநா் உமையாள்புரத்தைச் சோ்ந்த அருள்குமாா் (42) அவரது உதவியாளா் தினேஷ் குமாா் (36 ) மற்றும் வேன் உரிமையாளா் சதீஷ் (50) ஆகிய மூவா் மீது வழக்கு பதிந்து வேனை பறிமுதல் செய்தனா்.
அருள்குமாா் மற்றும் தினேஷ்குமாா் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...