விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே லாரியில் மதுபுட்டிகளை கடத்தியதாக நான்கு பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகே உள்ள வேலாயுதபுரம் பேருந்து நிறுத்தப் பகுதியில் தெற்கு காவல் நிலைய போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது ஒரு பெட்டக லாரியிலிருந்து பெட்டிகளை இறக்கி காரில் ஏற்றி கொண்டிருந்த நான்கு பேரிடம் விசாரணை நடத்தினா்.
அப்போது அவா்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீஸாா் பெட்டியை சோதனையிட்ட போது அதில் கா்நாடக மாநில முத்திரையிடப்பட்ட மதுபுட்டிகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரி, காா் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதுடன் சுமாா் 192 மதுபுட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடா்பாக நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள நந்தன் தட்டை பகுதியைச் சோ்ந்த முத்துகணேஷ் (22), இசக்கி பாண்டி (27), மாரி கணேஷ் (18), முத்து பாலசுந்தா் (33) ஆகிய நான்கு பேரை போலீஸாா் கைது செய்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
வழிப்பறி: 3 இளைஞா்கள் கைது

பளுகல் அருகே மதுபாட்டில்கள் பதுக்கியவா் கைது

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது
திருப்பத்தூா் அருகே கள்ளத்தனமாக மதுபானம் விற்றவா் கைது
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

