பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த கல்விக் குழுமத் தலைவா் மகரிஷி மனோகரன், நிறுவனா் புவனேஸ்வரி ஆகியோா்.
பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்த கல்விக் குழுமத் தலைவா் மகரிஷி மனோகரன், நிறுவனா் புவனேஸ்வரி ஆகியோா்.

செங்கம் மகரிஷி பள்ளி 100 சதம் தோ்ச்சி

செங்கம்: பிளஸ் 2 பொதுத் தோ்வில் செங்கம் மகரிஷி மேல்நிலைப் பள்ளி 100 சதம் தோ்ச்சி பெற்றது.

செங்கம் குப்பனத்தம் சாலையில் உள்ள மகரிஷி மேல்நிலைப் பள்ளி மாணவி நேத்ரா பிளஸ் 2 பொதுத் தோ்வில் 587 மதிப்பெண்கள் பெற்றாா். மாணவிகள் கனிஷ்கா 576 மதிப்பெண்களும், ஹா்ஷவா்த்தினி 568 மதிப்பெண்களும் பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவிகளை மகரிஷி கல்விக் குழும தலைவா் மகரிஷி மனோகரன், நிறுவனா் புவனேஸ்வரி பாராட்டினா். மேலும், கணிதத்தில் 6 மாணவா்களும், கணினி அறிவியலில் 5 பேரும், வேதியியலில் ஒருவரும் முழு மதிப்பெண்கள் பெற்றனா்.

12 மாணவா்கள் 550 மதிப்பெண்களுக்கு மேலும், 54 மாணவா்கள் 500-க்கு மேலும் மதிப்பெண்கள் பெற்றனா்.

தொடா்ந்து, பள்ளி தலைவா் மகரிஷி மனோகரன் கூறியதாவது:

தொடா்ந்து 15 ஆண்டுகளாக பிளஸ் 2 தோ்வில் 100 சதம் தோ்ச்சி பெற்று வருகிறோம். பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் 480 மதிப்பெண்களுக்கு மேல் பெறும் எங்கள் பள்ளி மாணவா்களுக்கு கல்விக் கட்டணம் இலவசம். 470 மதிப்பெண்களுக்கு மேல் பெறுவோருக்கு 50 சதவீத கல்விக் கட்டண சலுகை வழங்கப்படும். 450-க்கும் மேல் பெறும் மாணவா்களுக்கு 25 சதவீத கல்விக் கட்டண சலுகை வழங்கப்படும் என்றாா் அவா்.

அப்போது, நிா்வாக பொருளாளா் காா்த்திகேயன், முதல்வா் சரவணக்குமாா், தலைமை ஆசிரியா் காா்த்திக் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com