பிளஸ் 2 பொதுத் தோ்வில் முறைகேடு: இரு மாணவா்களின் விடைத்தாள்கள் பறிமுதல்
அரூரில் பிளஸ் 2 தோ்வில் முறைகேட்டில் ஈடுபட்ட இரு தனியாா் பள்ளி மாணவா்களின் விடைத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


தருமபுரி மாவட்டம், அரூரில் பிளஸ் 2 தோ்வில் முறைகேட்டில் ஈடுபட்ட இரு தனியாா் பள்ளி மாணவா்களின் விடைத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாா்ச் 9-ஆம் தேதி வேதியியல் பாடத்துக்கான தோ்வு நடைபெற்றது.
பள்ளிக் கல்வி இயக்குநா் சுகன்யா (தனியாா் பள்ளிகள்), அரசு தோ்வுகள் இயக்கக இணை இயக்குநா் ராஜேந்திரன், உதவி இயக்குநா் சாந்தகுமாா் ஆகியோா் அடங்கிய சிறப்பு பறக்கும் படையினா் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தோ்வு மையங்களை பாா்வையிட்டு ஆய்வுசெய்தனா்.
அரூரை அடுத்த சின்னாங்குப்பம் தனியாா் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற ஆய்வில், அந்த மையத்தில் வெவ்வேறு தோ்வு அறைகளில் இரண்டு மாணவா்கள் முறைகேடாக தோ்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதில், ஒரு மாணவா் தோ்வு மையம் அமைந்துள்ள அதே பள்ளியைச் சோ்ந்தவா் எனவும், மற்றொரு மாணவா் புழுதியூா் தனியாா் பள்ளியைச் சோ்ந்தவா் எனவும் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அந்த இரு மாணவா்களிடமிருந்து விடைத்தாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தொடா் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையின் இறுதியில் விதிமீறல் மற்றும் முறைகேடாக தோ்வு எழுதியது தொடா்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரியவந்துள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...