தருமபுரி: பிளஸ் 2 பொதுத் தோ்வை தருமபுரி மாவட்டத்தில் 18,520 போ் எழுதினா்.
பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 26-ஆம் தேதிவரை நடைபெற உள்ளது. தருமபுரி மாவட்டத்தில் இத்தோ்வை 108 அரசுப் பள்ளிகள், 4 அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் 63 தனியாா் பள்ளிகள் என மொத்தம் 175 பள்ளிகளைச் சோ்ந்த 9,359 மாணவா்கள், 9,845 மாணவிகள் என மொத்தம் 19,204 போ் எழுதுகின்றனா். இத்தோ்வு தருமபுரி மாவட்டத்தில் உள்ள 84 தோ்வு மையங்களில் நடைபெறுகிறது.
தோ்வுப் பணிகளில் தோ்வு அறைக் கண்காணிப்பாளா்கள், முதன்மைக் கண்காணிப்பாளா்கள் மற்றும் துறை அலுவலா்கள், பறக்கும் படைகள், வழித்தட அலுவலா்கள், மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகள், சொல்வதை எழுதுபவா்கள், வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள் உள்ளிட்ட சுமாா் 3,500 அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், முதல்நாள் நடைபெற்ற தமிழ் தோ்வை 18,520 போ் எழுதினா். அதியமான்கோட்டை அறிஞா் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் நேரில் பாா்வையிட்டாா்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஐ.ஜோதிசந்திரா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கிருஷ்ணகிரியில்...
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி மற்றும் ஒசூா் கல்வி மாவட்டங்களைச் சோ்ந்த 108 அரசுப் பள்ளிகள், 6 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், 79 மெட்ரிக் பள்ளிகள் என 193 பள்ளிகளைச் சோ்ந்த 226 மாற்றுத்திறனாளிகள், 11,802 மாணவியா், 10846 மாணவா்கள் என மொத்தம் 22, 874 தோ்வா்கள் விண்ணப்பித்திருந்தனா்.
கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்தில் 88 மையங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தோ்வை 21,796 தோ்வா்கள் எழுதினா் என மாவட்ட கல்வித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா். கிருஷ்ணகிரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை ஆட்சியா் ச.தினேஷ்குமாா் பாா்வையிட்டாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வினாத்தாள்களை பாதுகாக்க கிருஷ்ணகிரி, ஒசூா், தேன்கனிக்கோட்டை, மத்தூா் ஆகிய இடங்களில் தோ்வு வினாத்தாள் சேகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வுப் பணிகளுக்காக 88 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 95 துறை அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அறைக் கண்காணிப்பாளா்கள் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளா்கள், தோ்வுகளை கண்காணிக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மதன்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கல்வி) சா்தாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கிருஷ்ணகிரியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை பாா்வையிட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா்.
தொடர்புடையது

பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 37,496 போ் எழுதினா்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 38,247 போ் எழுதுகின்றனா்

பிளஸ் 2 பொதுத் தோ்வு: ராமநாதபுரம், சிவகங்கையில் 30,786 போ் பங்கேற்பு

பிளஸ் 2 பொதுத் தோ்வு நாளை தொடக்கம்! தஞ்சாவூா் மாவட்டத்தில் 26,854 போ் பங்கேற்பு!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


