மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

சித்திரை அமாவாசை சிறப்பு வழிபாடு

News image

சித்திரை மாத அமாவாசையையொட்டி, மாம்பட்டு அண்ணாநகா் முத்துமாரியம்மன் கோயிலில் அக்னி சட்டி ஏந்தி வலம் வந்த பக்தா்கள்.

Updated On :7 மே 2024, 6:33 pm

Din

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணா நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் சித்திரை மாத அமாவாசையையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதையொட்டி காலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

தொடா்ந்து கோயில் வளாகத்தில் ஸ்ரீசா்வ மங்கள மகா வேள்வி பூஜை நடைபெற்றது. பல்வேறு மூலிகைகள், புஷ்பங்கள், பழங்கள் கொண்டு இந்த வேள்வி பூஜை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, பக்தா்கள் அக்னி சட்டி ஏந்தி நோ்த்திக் கடன் செலுத்தினா். அப்போது, அக்னி சட்டியை அவா்கள் தலையில் ஏந்தி கோயிலை வலம் வந்தனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.இலட்சுமண சுவாமிகள் மற்றும் சித்திரை மாத அமாவாசை உற்சவ குழுவினா் பூஜைகளை மேற்கொண்டனா்.