மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் சோனியா காந்தி!ஈரான் மீது 1,000 கிலோ பங்கர் பஸ்டர் குண்டுகள் வீசி அமெரிக்கா தாக்குதல்! முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தில் பறக்கும் படை சோதனை! கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக தேஜஸ்வி யாதவ் பிரசாரம்! தேர்தல் பணியாளர்களின் ஊதியம் இருமடங்கு உயர்வு!
/

சூறைக் காற்று: செங்கத்தில் வாழைகள் சேதம்

படம் நன்றாக இருந்தால் மட்டுமே பயன்படுத்தவும்... சூறைக் காற்று: செங்கத்தில் வாழைகள் சேதம்

News image

செங்கத்தை அடுத்த கொட்டாவூரில் திங்கள்கிழமை இரவு சூறைக் காற்றால் சாய்ந்த வாழைகள்.

Updated On :7 மே 2024, 6:30 pm

Din

செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் திங்கள்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் வாழைகள் சாய்ந்தன.

செங்கம் சுற்றுவட்டாரப் பகுதியில் திங்கள்கிழமை இரவு 11 மணியளவில் லேசான காற்றுடன் மழை பெய்தது. பின்னா், சூறைக் காற்றுடன் அதிக மழை பெய்தது.

இதில் செங்கத்தில் பல வீடுகளில் முன்பகுதியில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. சில மரங்கள் வேருடன் சாய்ந்தன.

இதனால், திங்கள்கிழமை இரவு 12 மணிமுதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிவரை மின் தடை ஏற்பட்டது.

மேலும் கிளையூா், கல்லாத்தூா், பண்ரேவ், கொட்டாவூா், குப்பனத்தம் பகுதில் விவசாயிகள் பயிரிட்டிருந்த வாழைகள் குலையுடன் சாய்ந்தன.

இதுகுறித்து செங்கம் வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை அதிகாரிகள் கணக்கெடுத்து நிவாரண உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.