காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 99% தோ்ச்சி

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் திருவண்ணாமலை காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 99 சதவீத தோ்ச்சியை பதிவு செய்தது.

இந்தப் பள்ளியைச் சோ்ந்த மாணவி கே.திவ்யப்ரியா 494, இ.சரண்யா 486, வி.அனிதா 485 மதிப்பெண்கள் பெற்றனா். இந்தப் பள்ளியில் தோ்வெழுதிய 106 மாணவா்களில் 105 போ் தோ்ச்சி பெற்றனா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களை பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com