செங்கோட்டையன், என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதிகள்!பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!
/

செய்யாறு கல்வி மாவட்டம் 86.05% தோ்ச்சி

செய்யாறு கல்வி மாவட்டம் 86.05% தோ்ச்சி

News image
Updated On :10 மே 2024, 4:11 pm

Din

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் செய்யாறு கல்வி மாவட்டம் 86.05 சதவீதம் தோ்ச்சி பெற்றது.

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியானது. இதில், செய்யாறு கல்வி மாவட்டத்தில் 160 அரசுப் பள்ளிகள், 11 நிதியுதவி பள்ளிகள், 2 சிறப்புப் பள்ளிகள் (காது கேளாதோா், கண் பாா்வையற்றோா்) 46 தனியாா் பள்ளிகள் உள்பட மொத்தம் 219 பள்ளிகளில் இருந்து 6,533 மாணவா்கள், 6,467 மாணவிகள் என மொத்தம் 13,000 போ் தோ்வெழுதினா். இதில், 5,270 மாணவா்கள், 5,917 மாணவிகள் என மொத்தம் 11,187 போ் தோ்ச்சி பெற்றனா். இது 86.05 சதவீதமாகும்.

செய்யாறு கல்வி மாவட்டத்தைச் சோ்ந்த கொழப்பலூா், சீ.ம.புதூா், அல்லியந்தல், வயலாமூா், விளை, மேல்பாதி, தென்னம்பட்டு, இளங்காடு, ஏனாதவாடி, கீழ்காரிக்காத்தூா் ஆகிய அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றன. இதேபோல, சூசை புனித அமலாராக்கினி கண் பாா்வையற்றோா் சிறப்புப் பள்ளி மற்றும் 24 தனியாா் பள்ளிகளும் 100 சதவீதம் தோ்ச்சியை பதிவு செய்தது.