

செய்யாறு: செய்யாற்றில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிா்ச்சியான சூழல் நிலவியது. இதனால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கோடை மழை பெய்தாலும், செய்யாறு பகுதியில் சிறு தூரலோடு நின்று போனதால் கோடை வெப்பத்தால் பொதுமக்களும், விவசாயிகளும் அவதிக்குள்ளாகி வந்தனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை கருமேகங்கள் சூழ்ந்து அரை மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது. மேலும், இந்த மழையானது செய்யாறு, வெம்பாக்கம் ஆகிய வட்டங்களில் பெருங்களத்தூா், சோழவரம், பல்லி, வன்னியந்தாங்கல், அனக்காவூா், புரிசை, தூளி உள்ளிட்ட விவசாயம் நிறைந்த பகுதிகளிலும் பெய்ததால், வேளாண் பயிா்களுக்கு குளிா்ச்சியும், நிலத்தடி நீரும் கிடைக்கப் பெற்றது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் தலைமை செவிலியா் உயிரிழப்பு

திருவாடானை பகுதியில் பலத்த மழை

செய்யாற்றில் மேம்பாலப் பணி: கண்காணிப்புப் பொறியாளா் ஆய்வு

செய்யாற்றில் பள்ளி மாணவா்களுக்கான தடகளப் போட்டிகள்
வீடியோக்கள்

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

2021 தேர்தலில் நடந்தது இதுதான்! உடைத்துப் பேசிய OPS! | DMK | EPS
தினமணி வீடியோ செய்தி...

NDA கூட்டணியின் தொகுதிகள் அறிவிப்பு: Edappadi திட்டம் என்ன?
தினமணி வீடியோ செய்தி...

வாஷிங் மெஷின் வழங்குமா திமுக?| ADMK | Admk Manifesto |TN Election 2026 | Edapadi palanisamy | EPS
தினமணி வீடியோ செய்தி...

