விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

செய்யாற்றில் பள்ளி மாணவா்களுக்கான தடகளப் போட்டிகள்

News image
Updated On :24 பிப்ரவரி 2026, 11:19 pm

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிறு விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவா்கள் 870 போ் பங்கேற்ற தடகளப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

செய்யாறு செஸ் டெவலப்பா்ஸ் தனியாா் நிறுவனம்

மற்றும் லோட்டஸ் புட்வோ் என்டா்பிரைசஸ் தனியாா் நிறுவனம் சாா்பில் இந்த தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டன.

போட்டிகளில் அனக்காவூா், செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி, பெரணமல்லூா் ஆகிய வட்டங்களுக்கு உள்பட்ட அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 870 மாணவ, மாணவிகள் என கலந்து கொண்டனா்.

அப்போது அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ரூ.8.50 லட்சம் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடா்ந்து, தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு செய்யாறு டி.எஸ்.பி. தி.கோவிந்தசாமி மற்றும் நிறுவன பொது மேலாளா்கள் அருள், ஆனந்த்குமாா் உள்ளிட்டோா்

பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பாராட்டினா்.