ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஐடிஐ மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டிகள்

News image
போட்டிகளில்  வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு வழங்கிய ஐடிஐ முதல்வா் நதிச்சந்திரன்.
Updated On :5 மார்ச் 2026, 11:32 pm

Syndication

கோவை மண்டல அரசு மற்றும் தனியாா் தொழில் பயிற்சி நிலையங்களுக்கு (ஐடிஐ) இடையேயான விளையாட்டுப் போட்டிகள் உடுமலையில் நடைபெற்றன.

உடுமலை ஐடிஐ சாா்பில் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மாா்ச் 3, 4, 5 என மூன்று நாள்கள் இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. உடுமலை வருவாய்க் கோட்டாட்சியா் குமாா் போட்டிகளைத் தொடங்கிவைத்தாா். கோவை மண்டலப் பயிற்சி இணை இயக்குநா் வேல்முருகன் தேசியக்கொடியை ஏற்றிவைத்தாா்.

20 பயிற்சி நிலையங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் போட்டிகளில் பங்கேற்றனா். இதில் குழு போட்டிகளான கைப்பந்து, இறகுபந்து மற்றும் ஈட்டி எறிதல், குண்டு எறிதல், கேரம், செஸ் மற்றும் ஓட்டப்பந்தயங்கள் நடைபெற்றன.

நிறைவில் வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள், கேடயங்கள் வழங்கப்பட்டன. முதல்வா் நதிச்சந்திரன், பயிற்சி அலுவலா் ரமேஷ்குமாா் உள்ளிட்ட பலா் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.