உடுமலை தொகுதியில் கடந்த காலங்களில் போட்டியிட்டு வென்ற எஸ் ஜே.சாதிக்பாட்சா, பி.குழந்தை வேலூ, சி.சண்முகவேலு உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அமைச்சர் பணியாற்றியுள்ளனர்.
1951, 1962, 1984 என மூன்று முறை காங்கிரஸும், 1967, 1971, 1989, 1996 என நான்கு முறை; திமுகவும் 1977,1980 1991, 2008, 2006,2011,2016,2021 என 8 முறை அதிமுகவும் வெற்றி பெற்றுள்ளனர்.
தீர்க்கப்படாத பிரச்னைகள்
உடுமலையில் அரசு பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாகும். விவசாயிகளின் உள்ளிட்ட காய்கறிகளை சேமித்து வைக்க கிடங்கு அமைக்க வேண்டும். நகரில் பெருகிவிட்ட போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த புறவழிச்பாவை அமைக்க வேண்டும். உடுமலை நகரை ஒட்டி உள்ள ஊராட்சிப் பகுதிகளை இணைத்து நகராட்சி எல்லையை விரிவுபடுத்தி முதல் தர நகராட்சியாக உடுமலை நகராட்சியை மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலே இருந்து வருகின்றன.
யாருக்கு வெற்றி?
கடந்த 2001 முதல் 5 தேர்தல்களில் அதிமுக வென்றுள்ளது. தொடர்ந்து 5-ஆவது முறையாக அதிமுக வெல்லுமா அல்லது ஆளுங்கட்சியின் நலத்திட்டங்கள் திமுகவை 1996-க்குப் பிறகு கரை சேர்க்குமா என்பது மே 4-ஆம் தேதி தெரியவரும்.
அதிமுக வேட்பாளர்
2016, 2021 என இரண்டு முறை வெற்றி பெற்றுள்ள உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஹாட்ரிக் வெற்றியை நோக்கி களம் காணகிறார். உடுமலை அருகே உள்ள கோலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மோலாக உடுமலையில் கேபிள் தொழில் நடத்தி வருவதால் நன்கு அறிமுகமானவர். கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சராகவும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாரியத் தலைவராகவும் இருந்துள்ளார். தற்போது திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறார்.
இவர் அமைச்சராக இருந்தபோது ரூ.250 கோடியில் கால்நடை மருத்துவக் கல்லூரி மறறும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டது. உடுமலை தகராட்சிக்கு நூற்றாண்டு விழா நிதியாக அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ. 50 மோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. உடுமலை அரசு மருத்துவமனையில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் 100 படுக்கை கொண்ட ஒரு பிரிவு அமைக்கப்பட்டது. இவர் தொடர்ந்து வென்றாலும் அதிமுக ஆளுங்கட்சியாக இல்லாததால் இவர் நினைத்த திட்டங்களை நிறைவேற்ற முடியாதது பலவீனமாகும்.
திமுக வேட்பாளர்
உடுமலை தொகுதிக்கு உள்பட்ட பூளவாடி கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் மு.ஜெயக்குமார். எம்.ஏ. அரசியல் அறிவிலியல் உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளைப் படித்துள்ள இவர் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் பணியாற்றி வந்தார். தனது பணியை ராஜிநாமா செய்துவிட்டு முழு நேரமாக திமுகவில் பணியாற்றி வருகிறார். கடந்த 15 ஆண்டுகளாக மாவட்ட இளைஞரணி பொறுப்பாளராக இருந்து வருகிறார். அதிமுக ஆட்சியின்போது திமுக அறிவித்த பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து சிறை சென்றவர். உடுமலை நகர் மன்றத்தில் 24 ஆவது வார்டு கவுன்சிலராக பணியாற்றி வருகிறார் தனது சொந்த செலவில் உடுமலை நகரில் நூலகம் நடத்தி வருகிறார். பேரவைத் தேர்தலில் முதன் முறையாகப் போட்டியிடுகிறார் கிராமப்புறங்களில் அதிக அறிமுகம் இல்லாதது இவரது பலவீனம்.
நாதக வேட்பாளர்
உடுமலை சட்டப் பேரவைத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ம.ராம்குமார் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். வணிகவரி ஆலோசகராக இருந்து வருகிறார். உடுமலை நகரில் வசித்து வரும்: இவர் 2017ஆம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியில் பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு மாதமாக தொகுதிக்குள் மக்களிடம் வாக்குகளை சேகரித்து வருகிறார். 2021 தேர்தலில் உடுமலை தொகுதியில் நாம் தமிழர் கட்சி 8,502 வாக்குகளைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. முதல்முறை போட்டியிடுவதால் அதிக அனுபவம் இல்லாதவர் என்பது இவரது பலவீனம்.
தவெக வேட்பாளர்
தமிழக வெற்றிக் கழக வேட்பாளராக ஜி.ஜே.சங்கர் அறிவிக்கப்பட்டுள்ளார் திருப்பூர் மாவட்டத் தலைவராக பணியாற்றி வரும் இவர் திருப்பூரைச் சேர்ந்தவர். விஜய்யின் பிம்பம்தான் இவரது பலம் முதல்முறை போட்டியாளர், அனுபவம் குறைவு. பலமான எதிரணி, வெளியூர்வாசி போன்றவை இவரது பலவீனங்கள் ஆகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மன்னாா்குடியில் மகுடம் சூடுமா திமுக?

தொகுதி அலசல்... திருப்பத்தூா் ஹாட்ரிக் வெற்றி தொடருமா?

தொகுதி அலசல்: கூடலூர்! கடும் போட்டியில் திமுக - அதிமுக
கோபிசெட்டிபாளையம்... கே.ஏ. செங்கோட்டையனின் வெற்றிப் பயணம் தொடருமா?
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


