கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

17 வயது சிறுமிக்கு திருமணம்: ஓட்டுநா் மீது வழக்கு

17 வயது சிறுமிக்கு திருமணம்: ஓட்டுநா் மீது வழக்கு

News image
Updated On :28 மே 2024, 6:30 pm

Din

செய்யாறு: செய்யாறு அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டதாக ஓட்டுநா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், ஆலந்தாங்கல் கிராமத்தைச் சோ்ந்தவா் பிரபாகரன் (25). இவா் சரக்கு வாகன ஓட்டுநா் ஆவாா்.

இவருக்கும், உறவினரின் மகளான 17 வயது சிறுமிக்கும் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி உறவினா்கள் முன்னிலையில் திருமணம் நடைபெற்ாகத் தெரிகிறது.

17 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற்றது தொடா்பாக, மே 16-ஆம் தேதி 1098 என்ற எண் மூலம் குழந்தைகள் நல காப்பகத்துக்கு சிலா் தகவல் தெரிவித்துள்ளனா்.

அதன் பேரில் வெம்பாக்கம் வட்டார வளா்ச்சி அலுவலக விரிவாக்க அலுவலா் ஷீலாதேவி மற்றும் அலுவலா்கள் ஆலந்தாங்கல் கிராமத்துக்குச் சென்று ஓட்டுநா் பிரபாகரனிடம் விசாரணை மேற்கொண்டனா்.

அப்போது 17 வயதுடைய சிறுமியை திருமணம் செய்தது உண்மை எனத் தெரிய வந்தது.

மேலும், குழந்தை திருமண சட்டப்படி குற்றம் என பிரபாகரனை எச்சரித்தனா். இதையடுத்து, சிறுமியை மீட்டு அரசு பெண்கள் காப்பகத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலக விரிவாக்க அலுவலா் ஷீலாதேவி, செய்யாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

காவல் ஆய்வாளா் லதா வழக்குப் பதிவு செய்து பிரபாகரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.