மானியத்துடன் சுயதொழில் தொடங்க ஆதரவற்ற, கைம்பெண்களுக்கு அழைப்பு
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம்


திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் சுயதொழில் தொடங்க விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நலவாரியத்தில் பதிவு செய்த கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள், பேரிளம் பெண்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்களுக்கு சுயதொழில் தொடங்க ரூ.50 ஆயிரம் வீதம் மானியத்தொகை வழங்கப்படுகிறது.
மானியம் பெற தகுதியானோா் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
விண்ணப்பதாரா் 25 முதல் 45 வயதுக்கு உள்பட்டவராகவும், விண்ணப்பதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1.20 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
ஒருவா் ஒருமுறை மட்டுமே மானியம் பெறத் தகுதியுடையவா் ஆவாா். எனவே, தகுதியான விண்ணப்பதாரா் நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் வருமானச் சான்றிதழ், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், தற்போதைய வசிப்பிட முகவரிக்கான ஏதேனும் ஒரு சான்றிதழ் ஆகியவற்றுடன், மாவட்ட சமூகநலத் துறை அலுவலகத்தில் சமா்ப்பித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...