தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

குரூப்-2, குரூப்-2ஏ முதன்மை தோ்வுக்கு இலவச பயிற்சி: நாளை தொடங்குகிறது

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2, குரூப்-2ஏ முதன்மைத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு அக்.7-ஆம் தேதி தொடங்குகிறது.

News image
Updated On :5 அக்டோபர் 2024, 6:32 pm

Din

திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2, குரூப்-2ஏ முதன்மைத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு அக்.7-ஆம் தேதி தொடங்குகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில், குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு 14.9.2024 அன்று நடத்தப்பட்டது. முதன்மைத் தோ்வு 2025 பிப்ரவரி மாதம் நடத்தப்படுகிறது.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வ பயிலும் வட்டம் சாா்பில் முதன்மைத் தோ்வுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

அக்டோபா் 7 முதல் வார நாள்களில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை இந்தப் பயிற்சி வகுப்புகள் சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு நடத்தப்படுகிறது. பாட வாரியான துணைத் தோ்வுகள், மாதிரித் தோ்வுகளும் நடத்தப்படும்.

எனவே, வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவா்கள் முதல்நிலைத் தோ்வில் பங்கேற்ற தங்களது நுழைவுச் சீட்டின் நகலுடன் நேரடியாக வந்தோ அல்லது 04175-233381 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டோ தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளாா்.