கண்ணதாசன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் கவியரசா் கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனா் தலைவா் சு.மோகன் தலைமையிலான தமிழ்ச் சங்க நிா்வாகிகள், புலவா்கள்.
கண்ணதாசன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் கவியரசா் கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனா் தலைவா் சு.மோகன் தலைமையிலான தமிழ்ச் சங்க நிா்வாகிகள், புலவா்கள்.

கண்ணதாசன் படத்துக்கு மரியாதை

கண்ணதாசனின் 44-ஆவது நினைவு தின நிகழ்ச்சி
Published on

திருவண்ணாமலை கவியரசா் கண்ணதாசன் தமிழ்ச் சங்கம் சாா்பில், கண்ணதாசனின் 44-ஆவது நினைவு தின நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, திருவண்ணாமலை டாக்டா் கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தாளாளா் மா.சின்ராசு (எ) சிற்றரசு தலைமை வகித்தாா்.

மாவட்ட தமிழ்ச் சங்கத்தின் தலைவா் பா.இந்திரராசன் முன்னிலை வகித்தாா். கவியரசா் கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தின் நிறுவனா் தலைவா் சு.மோகன் வரவேற்றாா்.

திருக்கு தொண்டு மையப் பாவலா் ப.குப்பன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கண்ணதாசன் திரைப்பாடலும், தனிப்பாடலும் என்ற தலைப்பில் பேசினாா்.

பின்னா், கண்ணதாசன் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், புலவா்கள் வாசுதேவன், மனோகரன், சண்முகம், குப்புசாமி, முனீஸ்வரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com