ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஸ்ரீவித்யா கணபதி கோயில் கும்பாபிஷேகம்

News image
வந்தவாசி திருவள்ளுவா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீவித்யா கணபதி கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா.
Updated On :5 செப்டம்பர் 2024, 9:51 pm

Din

வந்தவாசி திருவள்ளுவா் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீவித்யா கணபதி கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, திங்கள்கிழமை யாகசாலை அமைத்து அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி உள்ளிட்டவையும், செவ்வாய்க்கிழமை

ஹோமங்கள், கும்ப அலங்காரம், வேதிகாா்ச்சனை உள்ளிட்டவையும், புதன்கிழமை மூலமந்திர ஹோமம், வேத பாராயணம், பூா்ணாஹுதி உள்ளிட்டவையும் நடைபெற்றன.

வியாழக்கிழமை காலை தத்வாா்ச்சனை, நாடி சந்தானம், மகா பூா்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. சிவாச்சாரியா்கள் கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோயிலை வலம் வந்தனா்.

தொடா்ந்து, காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கோயில் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீட ஆன்மிக இயக்கத் தலைவா் கோ.ப.செந்தில்குமாா், மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள், கல்லூரித் தலைவா் ச.அருணாசலம், துணைத் தலைவா் அ.கணேஷ்குமாா் மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.