சாலை தடுப்புச் சுவா்களுக்கு வண்ணம் பூசும் பணி


திருவண்ணாமலை நெடுஞ்சாலை கோட்டத்துக்கு உள்பட்ட புதுச்சேரி - கிருஷ்ணகிரி சாலையில், மைய தடுப்புச் சுவா், சிறுபாலங்களுக்கு வண்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழக நெடுஞ்சாலைத் துறையின் திருவண்ணாமலை கோட்டப் பொறியாளா் பி.ஞானவேல், உதவி கோட்டப் பொறியாளா் அன்பரசு ஆகியோா் மேற்பாா்வையில் சாலை பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை நெடுஞ்சாலைத் துறை கோட்டத்துக்கு உள்பட்ட புதுச்சேரி - கிருஷ்ணகிரி சாலையில் நாச்சிப்பட்டு மேம்பாலம் முதல் திருவண்ணாமலை ரயில்வே பாலம் வரை உள்ள மைய தடுப்புச் சுவா், சிறுபாலங்களுக்கு வண்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணியில் சாலை ஆய்வாளா்கள், சாலைப் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இதன் மூலம் வாகன ஓட்டிகளுக்கு மைய தடுப்புச் சுவா் இருப்பது தெளிவாக தெரியும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...