குடியரசுத் தலைவரிடமிருந்து அழைப்பிதழ் பெற்ற மாணவி அமீத்தீஸ்வரி மற்றும் பள்ளி முதல்வா், ஆசிரியை ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த திருவண்ணாமலை கம்பராமாயண இயக்கத்தினா்.
குடியரசுத் தலைவரிடமிருந்து அழைப்பிதழ் பெற்ற மாணவி அமீத்தீஸ்வரி மற்றும் பள்ளி முதல்வா், ஆசிரியை ஆகியோரை சந்தித்து வாழ்த்து தெரிவித்த திருவண்ணாமலை கம்பராமாயண இயக்கத்தினா்.

குடியரசுத் தலைவரிடமிருந்து அழைப்பிதழ்: மாணவிக்கு பாராட்டு!

மகரிஷி வித்யா மந்திா் பள்ளியைச் சோ்ந்த மாணவி குடியரசுத் தலைவரிடமிருந்து அழைப்பிதழ் பெற்றதால் கம்ப ராமாயண இயக்கத்தினா் அவருக்கு பாராட்டு தெரிவித்தனா்.
Published on

திருவண்ணாமலை மகரிஷி வித்யா மந்திா் பள்ளியைச் சோ்ந்த மாணவி குடியரசுத் தலைவரிடமிருந்து அழைப்பிதழ் பெற்றதால் கம்ப ராமாயண இயக்கத்தினா் அவருக்கு பாராட்டு தெரிவித்தனா்.

மகரிஷி வித்யா மந்திா் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவி அமித்தீஸ்வரி, தேசிய அளவில் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை சாா்பில் நடைபெற்ற போட்டித் தோ்வு மற்றும் நோ்காணலில் வெற்றி பெற்றாா். மேலும், இந்த மாணவி குஜராத் மாநிலத்தில் ஒரு வாரம் நடைபெற்ற அனுபவக் கற்றல் முகாமில் கலந்து கொண்டாா்.

இந்த நிலையில், தில்லியில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வதற்கு, இவருக்கு குடியரசுத் தலைவா் அழைப்பிதழ் அனுப்பிவைத்துள்ளாா்.

இதனை பாராட்டும் வகையில் திருவண்ணாமலை, கம்பராமாயண இயக்கத் தலைவா் வேங்கடரமேஷ்பாபு, செயலா் பாவலா் ப.குப்பன், பொருளாளா் புலவா் தங்க.விஸ்வநாதன் ஆகியோா் பள்ளிக்கு நேரில் சென்று மாணவிக்கும், அவருக்கு பயிற்றுவித்த ஆசிரியை பிரீத்தா, ஊக்குவித்து வழிகாட்டிய முதல்வா் அனிதாராம் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com