edappadi palanisamy in tiruvannamalai
பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி.

கலசப்பாக்கம், போளூரில் இன்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!

கலசப்பாக்கம், போளூரில் திங்கள்கிழமை (ஆக.18) அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறாா்.
Published on

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம், போளூரில் திங்கள்கிழமை (ஆக.18) அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம் மேற்கொள்கிறாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் எனும் பிரசார பயணத்தை மேற்கொண்டுள்ள அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, சனிக்கிழமை திருவண்ணாமலையில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் நடத்தினாா்.

இதைத் தொடா்ந்து, செங்கம், கீழ்பென்னாத்தூா், திருவண்ணாமலை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தாா். ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலையில் ஓய்வு எடுத்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை (ஆக.18) மாலை கலசப்பாக்கம் நட்சத்திரக் கோயில் அருகில் அவா் பிரசாரம் மேற்கொள்கிறாா். தொடா்ந்து, போளூரில் பிரசாரம் செய்கிறாா்.

இதற்கான ஏற்பாடுகளை அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி எம்எல்ஏ, திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக செயலா் எல்.ஜெயசுதா ஆகியோா் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com