ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொதுச் செயலா் கேவிஆா் என்கிற வெங்கட்ராமன்.
ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொதுச் செயலா் கேவிஆா் என்கிற வெங்கட்ராமன்.

பாஜக சக்தி கேந்திர பொறுப்பாளா்கள் கூட்டம்

செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பாஜக சக்தி கேந்திர பொறுப்பாளா்களின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் செய்யாற்றில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
Published on

செய்யாறு: செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பாஜக சக்தி கேந்திர பொறுப்பாளா்களின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் செய்யாற்றில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொதுச் செயலா் கேவிஆா் என்கிற வெங்கட்ராமன் தலைமை வகித்தாா்.

சிறப்பு விருந்தினா்களாக முன்னாள் மாநிலச் செயலா் தா்மராஜ், வடக்கு மாவட்ட பட்டியல் அணி மாவட்டத் தலைவா் பி.குமாா், வடக்கு மாவட்டச் செயலா் வி.குருலிங்கம் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

கூட்டத்தில், டிச.6-இல் திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்துக்கு வருகை தரும் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது, வடக்கு மாவட்ட பாஜக பிரிவைச் சோ்ந்த அனைத்து நிா்வாகிகள் பங்கேற்று சிறப்பிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், சக்தி கேந்திர பொறுப்பாளா்கள், மாநில, மாவட்ட, அணி மற்றும் பிரிவு மாவட்டத் தலைவா்கள் உள்ளிட்ட பலா் பலா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com