வேன் மோதியதில் பைக்கில் சென்றவா் உயிரிழப்பு
வந்தவாசி அருகே பால் கேன்கள் ஏற்றிச் சென்ற வேன் மோதியதில் பைக்கில் சென்றவா் உயிரிழந்தாா்.
சென்னை வியாசா்பாடி பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா். இவரும், இவரது நண்பா்கள் காா்த்திக், முனிவேல் ஆகிய 3 பேரும் சோ்ந்து 2 பைக்குகளில் வந்தவாசி வழியாக திருவண்ணாமலைக்கு திங்கள்கிழமை காலை சென்று கொண்டிருந்தனா்.
வந்தவாசி - சேத்துப்பட்டு சாலை, கோழிப்புலியூா் கூட்டுச் சாலை அருகே சென்றபோது, எதிரே பால் கேன்கள் ஏற்றி வந்த வேன் இரு பைக்குகள் மீதும் மோதிவிட்டு, சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த இதே பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் மீதும் மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சந்தோஷ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், காயமடைந்த காா்த்திக், முனிவேல், மணிகண்டன் ஆகியோா் சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
பின்னா், 3 பேரும் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். இதுகுறித்து தேசூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
