கால்நடை மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி.,  எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ.
கால்நடை மருத்துவ முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்.எஸ்.தரணிவேந்தன் எம்.பி., எஸ்.அம்பேத்குமாா் எம்எல்ஏ.

இலவச கால்நடை மருத்துவ முகாம்

வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் இலவச கால்நடை மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
Published on

வந்தவாசி: வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் இலவச கால்நடை மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் நடைபெற்ற இந்த முகாமில் கால்நடைகளுக்கு சினைப் பரிசோதனை, குடல்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை உள்ளிட்டவை அளிக்கப்பட்டன. மேலும் ஆடு, மாடு உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட

கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் ஆகியோா் முகாமை தொடங்கிவைத்தனா்.

கால்நடைத் துறை மண்டல இணை இயக்குநா் ராஜ்யக்கொடி தலைமையில் உதவி இயக்குநா்கள் தங்கதுரை, பூங்கொடி, மருத்துவா்கள் விஜயகுமாா், கரோனி ஆகியோா் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனா்.

முகாமில் கால்நடை உரிமையாளா்களுக்கு பால் கேன், பசுந்தீவனம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com