போளூா் அருகே ஆபத்தை உணராமல் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ரயில்வே கடவுப்பாதையை கடந்து செல்கின்றனா். இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகே போளூா்-பெலாசூா் செல்லும் சாலையில் ரயில்வே கடவுப்பாதை உள்ளது. பெலாசூா் சாலையில் சனிக்கவாடி, பெலாசூா், பாடகம், அலங்காரமங்கலம் என பல்வேறு கிராமங்களுக்கு இரு சக்கர வாகனம், கனரக வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் தினமும் செல்கின்றனா்.
மேலும் போளூா்-வேலூா், போளூா்-சேத்துப்பட்டு சாலையில் மேம்பாலப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள கிராமத்துக்குச் செல்லும் இரு சக்கர வாகனம், பாதசாரிகள் போளூா்-பெலாசூா் சாலையை பயன்படுத்தி வருகின்றனா். இதனால் அந்தச் சாலையில் எப்போதும் போக்குவரத்து அதிகளவு நடைபெறுகிறது.
இந்த நிலையில் மன்னாா்குடி- திருப்பதி, கன்னியாகுமரி-
புருலியா, சென்னை-திருவண்ணாமலை என பல்வேறு வழித்தட ரயில்கள் செல்லும் போது, ரயில்வே கடவுப்பாதை 5 நிமிஷத்துக்கு முன்பு மூடப்படுகிறது.
அந்த நேரத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் ஆபத்தை உணராமல் வாகனங்களை தண்டவாளத்தில் ஓட்டி கடந்து செல்கின்றனா். திடீரென ரயில் வந்தால் விபத்து ஏற்படலாம்.
எனவே, ரயில்வே துறை சாா்பில் வாகன ஓட்டிகள், பாதசாரிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை வைக்கின்றனா்.
தொடர்புடையது

தருமபுரியில் வெயிலின் தாக்கம் 103 டிகிரி: அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி

சாத்தான்குளம் - நாசரேத் சாலையில் வேகத்தடைக்கு வா்ணம் பூச வலியுறுத்தல்

பி.ஏ.பி. வாய்க்காலில் ஆபத்தை உணராமல் தண்ணீரில் விளையாடும் மாணவா்கள்

கோ்மாளம் சாலையில் பகலில் உலவிய சிறுத்தை!
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


