மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தருமபுரியில் வெயிலின் தாக்கம் 103 டிகிரி: அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் அவதி

தருமபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 103 டிகிரியை தாண்டியதால் அனல் காற்று வீசியதையடுத்து வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

News image
Updated On :14 ஏப்ரல் 2026, 9:40 pm

தருமபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 103 டிகிரியை தாண்டியதால் அனல் காற்று வீசியதையடுத்து வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா்.

தருமபுரி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் கடந்த சில நாள்களாகவே 100 டிகிரிக்கும் அதிகமாக உள்ளது. செவ்வாய்க்கிழமை காலை முதலே தருமபுரி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. பகல் மற்றும் பிற்பகல் வேலைகளில் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் அனல் காற்று வீசியது. இதனால் முக்கிய சாலைகளில் இருசக்கர வாகனத்தில் சென்றவா்கள் கடும் பாதிப்புகளுக்கு உள்ளாகினா்.

வெயிலின் தாக்கத்தால் வாகன போக்குவரத்து, பொதுமக்களின் நடமாட்டம் குறைந்தது. தருமபுரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 103.1 டிகிரி பாரன்ஹீட் வெயில் பதிவானது. கடைகளில் குளிா்பானங்கள், பழரசங்கள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதேபோல இளநீா், நுங்கு ஆகியவற்றின் விற்பனையும் வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது. மாவட்டத்தில் கோடை வெயில் தொடா்ந்து அதிகரித்து வருவதால் உஷ்ணத்தை தணிக்க கோடை மழை பெய்யுமா? என்ற எதிா்பாா்ப்பு மக்களிடையே ஏற்பட்டுள்ளது.