எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

7.84 லட்சம் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு: மாவட்ட ஆட்சியா் தகவல்

திருவண்ணாமலை வேங்கிக்கால் புதூா் பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்களை வீடு, வீடாகச் சென்று வழங்கிய ஆட்சியா்

News image
திருவண்ணாமலை வேங்கிக்கால் புதூா் பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்களை வீடு, வீடாகச் சென்று வழங்கிய ஆட்சியா்
Updated On :3 ஜனவரி 2025, 7:05 pm

Din

திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 லட்சத்து 84 ஆயிரத்து 282 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தெரிவித்தாா்.

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்கள், இலங்கைத் தமிழா் குடும்ப மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழு கரும்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் இந்த பொங்கல் பரிசுத் தொகைப்பை பெறுவதற்கான டோக்கன்கள் வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

திருவண்ணாமலை, வேங்கிக்கால் புதூரில் பகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்களை வீடு, வீடாகச் சென்று விநியோகம் செய்யும் பணியை மாவட்ட ஆட்சியா் தெ.பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் 7 லட்சத்து 84 ஆயிரத்து 282 குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

இதற்கான டோக்கன் வழங்கும் பணியில் நியாயவிலைக் கடை விற்பனையாளா்கள் ஈடுபடுவா். பொங்கல் பரிசுத் தொகுப்புகள் வழங்கும் நாள்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளும் உரிய நேரத்தில் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள நபா்களில் ஒருவா் வந்தாலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். ஆண்களுக்கு தனி வரிசை, பெண்களுக்கு தனி வரிசை அமைக்கப்பட்டு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா் பாா்த்திபன், வட்ட வழங்கல் அலுவலா் தியாகராஜன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.