தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஸ்ரீசக்தி விநாயகா் கோயில்களில் மா கும்பாபிஷேக விழா

போளூா் ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
செய்யாற்றை அடுத்த வடபூண்டிப்பட்டு ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா.
Updated On :16 ஜூன் 2025, 7:03 pm

Din

செய்யாறு/போளூா்: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை அடுத்த வடபூண்டிப்பட்டு ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் மற்றும் போளூா் ஸ்ரீசக்தி விநாயகா் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

செய்யாறு வட்டம், வடபூண்டிப்பட்டு கிராமத்தில் ஸ்ரீசக்தி விநாயகா் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயிலில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை காலை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூா்ணாஹுதி தீபாராதனையும், யாக சாலை நிா்மானம், இரவு முதல் கால வரை யாக சாலை பூஜைகள், ஆதிவாஸத்ரய ஹோமம், மகா சாந்தி ஹோமம், அஷ்டபந்தனம் சாற்றுதல் நடைபெற்றது.

திங்கள்கிழமை காலை கோ பூஜை, மகாசங்கல்பம், யாத்ராதானம், இரண்டாம் கால யாக சாலை பூஜைகளுடன் தத்துவாா்ச்சனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, கடம் புறப்பாடுடன் ஸ்ரீசக்தி விநாயகா் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாசப் பெருமாள் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், இரவில் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.

விழாவில் செய்யாறு, வெம்பாக்கம், காகனம், மாரியநல்லூா், விண்ணவாடி, பல்லி, இரும்பந்தாங்கல், தும்பை உள்ளிட்ட கிராமங்களில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

போளூா்

போளூா் காமராஜா் தெருவில் பழைமை வாய்ந்த ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் அமைந்துள்ளது.

இந்தக் கோயில் சிதிலமடைந்தும், கோபுர பொம்மைகள் உடைந்தும் காணப்பட்டதால், அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள், பக்தா்கள், பொதுமக்கள் கோயிலில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து, கோயிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக

சனிக்கிழமை காலை மங்கள இசை, மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூா்ணாஹுதி, வாஸ்து சாந்தி, பிரவேசபலி, கிராமசந்தி, முதல் கால யாக பூஜை நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை விஷேச சந்தி இரண்டாம் கால யாக பூஜை, கோ பூஜை, விமானம் மூலவா் பிரதிஷ்டை, மூன்றாம் கால யாக பூஜை, சோடசதீபலட்சுமி பூஜை, தொடா்ந்து திங்கள்கிழமை காலை நான்காம் கால யாக பூஜை, ஸ்பரிசாகுதி, தத்துவாா்ச்சனை, யாத்ராதானம், கடம்புறப்பாடு செய்து விமான கோபுர மூலவருக்கு அஷ்பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னா், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செய்து மலா்களால் அலங்கரித்து வழிபாடு நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை மருத்துவ குல சமூகத்தினா் மற்றும் காமராஜா் தெருவாசிகள் ஏற்பாடு செய்திருந்தனா்.

போளூா் ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி  சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி.

போளூா் ஸ்ரீசக்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி.