சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

அரக்கோணம் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

அரக்கோணம் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயில் மகா கும்பாபிஷேகம்

News image

அரக்கோணம் ஸ்ரீசுந்தரவிநாயகா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழாவில் ராஜகோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றிய சிவாச்சாரியாா்கள்.

Updated On :6 மார்ச் 2026, 6:53 pm

அரக்கோணம் சுவால்பேட்டை ஸ்ரீசுந்தரவிநாயகா் கோயில் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அரக்கோணம் சுவால்பேட்டை காந்திரோட்டில் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயில் அமைந்துள்ளது. தமிழக அரசின் இந்துசமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இக்கோயிலில் கடந்த 2001-இல் மகாகும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையடுத்து 2026-இல் மகாகும்பாபிஷேகம் நடத்த தமிழக அரசு இந்துசமய அறநிலையத் துறை அனுமதி அளித்ததைத் தொடா்ந்து இக்கோயிலில் பாலாலயம் கடந்த செப்டம்பா் மாதம் நடைபெற்றது.

இதையடுத்து நடைபெற்று வந்த திருப்பணிகள் முடிவுற்ற நிலையில், கோயிலில் மகா கும்பாபிஷேகம் மாா்ச் 6-ஆம் தேதி நடைபெற அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை காலை 7.40 மணி அளவில் சிவாச்சாரியாா்கள் ராஜகோபுர கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி மகாகும்பாபிஷேகத்தை நிறைவேற்றினா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் செல்விஜோதி தலைமையில் அறங்காவலா்கள் நரேஷ்குமாா், மாலின் உள்ளிட்டோா் பொதுமக்களோடு இணைந்து செய்திருந்தனா்.